search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்புகளை அகற்றம்"

    • 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு அமைய உள்ளது
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் 2021-22ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெங்கடாபுரம் சாலையோரம் 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு, உலர்களம், கச்சாரோடு ஆகியவை அமைய உள்ளது.

    மேற்கண்ட பணிகள் நடைபறுவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் ஐஏஎஸ் நேற்று வருவாய் துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

    அப்போது, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய கண்காணிப்பு அலுவலர், மேற்கண்ட பணிகள் தொடங்குவதற்கு வசதியாக இப்பகுதியில் உள்ள அரசு நிலங்களை யாரேனும் ஆக்கிரமித்து இருந்தால் அதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது சோளிங்கர் தாசில்தார் கணேசன், காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், பிடிஓ தண்டாயுதபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
    • ஆர்ப்பாட்டம் செய்வதாக எச்சரிக்கை.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் அண்ணாதெரு, ஜி.பி.எம்.தெரு, கொசஅண்ணாமலை தெரு, தாடிஅருணாசல தெரு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    மேலும் கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கூரை சீட்டுகள் அகற்றப்பட்டது மேலும் கால்வாய் மீது கட்டப்பட்ட இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இந்நிலையில் குடியாத்தம் நகர செயலாளர் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.கே.அன்பு, நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி, சிட்டிபாபு, லாவண்யாகுமரன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான பி.மேகநாதன் உள்ளிட்டோர் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசை சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் ஒரு குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாகும் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டினால் விரைவில் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    ×